சின்னப் பாப்பா'சின்னச் சின்ன பாப்பா

எங்க வீட்டு பாப்பா

ஆன்ட்டிராய்டு ஃபோனை

பூனை போல தேடும்

தேடித் தேடி எடுத்து

கேம் விளையாடும்

சின்னச் சின்ன பாப்பா

எங்க வீட்டுப் பாப்பா

டிவி ரிமோட் எடுத்து

டாக்கிங் டாமை போடும்

டாம் பாடும் பாட்டை

தானும் கூட பாடும்

சின்னச் சின்ன பாப்பா

எங்க வீட்டுப் பாப்பா

பள்ளிக் கூடம் விட்டு வந்தா

பர்கர் தேடி பார்க்கும்

ஃப்ரிட்ஜ் முழுக்க சாக்லேட்டை

எடுத்து எடுத்துப் பார்க்கும்

சின்னச் சின்னப் பாப்பா

எங்க வீட்டுப் பாப்பா

பொறிகடலை பனைவெல்லம்

போட்டுத் தின்னு பாப்பா

அந்தக்கால பாப்பா எல்லாம்

தின்னு நல்லா வளர்ந்தது

நீயூம் தின்னு பாப்பா

எங்கள் செல்லப் பாப்பா'

Comments

Popular posts from this blog

"நாய்க்குட்டி"

பாப்பா பாட்டு!