"நாய்க்குட்டி"'தோ தோ நாய்க்குட்டி

துள்ளி வராத நாய்க்குட்டி

யார் வந்து நின்னாலும்

குரைக்கத் தெரியாத நாய்க்குட்டி

புசுபுசுன்னு வளர்ந்த வாலை

ஆட்;டத் தெரியாத நாய்க்குட்டி

செல்லமாக மடியில் வைச்சு

கொஞ்சினாலும் கத்தினாலும்

கத்தத் தெரியாத நாய்க்குட்டி

பேட்டரி போட்ட பின்னாடிதான்

வந்து கத்தும் வாலை ஆட்டும்

எங்கள் பொம்மை நாய்க்குட்டி'

Comments

  1. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சின்னப் பாப்பா

பாப்பா பாட்டு!